பாஜக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சூர்யா சிவா திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, நான் வரச்சூர் செல்வத்திடம் மன்னிப்பு கேட்கவில்லை. அவர்தான் என்னிடம் மன்னிப்பு கேட்டார். அதன் பிறகு அதற்கான ஆடியோ ஆதாரத்தையும் அவர் வெளியிட்டார். நான் தற்போது பாஜக சமூகராக தொடர்கிறேன். என்னுடைய ராஜினாமா கடிதத்தை இன்னும் தலைமை ஏற்கவில்லை. 2026-ம் ஆண்டு தேர்தலில் பாஜகவின் தலைவராக அண்ணாமலை இருப்பார். அப்போது பாஜக தமிழ்நாட்டில் தனி பெருமையுடன் ஆட்சியைப் பிடித்து அண்ணாமலை முதல்வராக இருப்பார் என்று கூறினார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக ரவுடி வரிச்சூர் செல்வம் ஹெல்மெட் அணியாமல் சென்ற காரணத்திற்காக அவருக்கு போலீசார் அபராதம் விதித்திருந்தனர். இது தொடர்பான செய்தி பத்திரிகைகளில் வந்த நிலையில் வரிச்சூர் செல்வம் பேட்டியளித்தார். அப்போது தன்னை யாரும் ரவுடி என குறிப்பிட வேண்டாம் எனவும் என்னை யாராவது கோமாளி என குறிப்பிட்டால் நான் சந்தோஷப்படுவேன் என்றும் கூறினார். டுவிட்டர் பக்கத்தில் திருச்சி சூர்யா தன்னை ரவுடி என்று குறிப்பிட்டதற்கு தன்னிடம் மன்னிப்பு கேட்டதாகவும் கூறியிருந்தார்‌. ஆனால் திருச்சி சூர்யா சிவா தான் அவரிடம் மன்னிப்பு கேட்கவில்லை எனவும் அவர்தான் என்னிடம் மன்னிப்பு கேட்டார் எனவும் தற்போது கூறியுள்ளார்.