
சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின் டிஆர்பிக்கு முக்கிய காரணம் நடிகர் மாரிமுத்து தான். குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்தது. அதைவிட இந்தமா ஏய் என்று அவர் கூறும் வார்த்தை தான் ஹைலெட். இவர் நடிகராவதற்கு முன்பாக துணை இயக்குனராக ராஜ்கிரன், மணிரத்தினம், எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பலருடன் பணியாற்றி இருக்கிறார். இந்த நிலையில் இன்று இவர் மாரடைப்பால் காலமானார். சமீபத்தில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் கெஸ்ட்டாக கலந்து கொண்டார் மாரிமுத்து. ஜோதிடர்கள் மற்றும் அதனை எதிர்ப்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் சென்றது.
கெஸ்ட் ஆக வந்த மாரிமுத்து ஜோதிடர்களை கடுமையாக விளாசியுள்ளார். இந்தியா முன்னேறாமல் இருப்பதற்கு ஜோதிடர்கள் தான் காரணம். ஜோதிடர்களை பார்ப்பவரையும், கூறுபவரையும் மன்னிக்கவே முடியாது. அது மட்டும் இல்லாமல் அவர் கேட்ட கேள்வி அனைத்து ஒட்டுமொத்த பார்வையாளர்களுக்கும் கேள்வியாகவே இருந்தது என்று கூறலாம். அவர் பேசியதற்கு கோபப்பட்ட ஜோதிடர் ஒருவர் குணசேகரனை சராமாரியாக பேசினார். அதற்கு மாரிமுத்து தன்னுடைய பாணியில் தோரணையாக பதில் அளித்தார். நான் கடவுளுக்கே பயப்பட மாட்டேன். நீங்கள் யார்? என்று கூறினார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
தரமான பதில்கள்….
குறிப்பா ரஜினிய வச்சி பேசினது Validஹான point….
உழைப்பில்லனா இங்க ஒரு மண்ணுமில்ல…
நாத்திகம் மக்களை தெளிவுபடுத்த அவசியமானது…
அத சரியா பேசும் போது மக்கள சிந்திக்க வைக்கும்..
That last Punch ❤❤❤❤🤣🤣🤣 pic.twitter.com/21IwXKYBq6
— பாக்டீரியா (@Bacteria_Offl) July 23, 2023