கோலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி டைரக்டராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இப்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் லியோ படத்தை கடைசியாக இயக்கினார். இந்நிலையில் தான் பேஸ்புக்கில் இல்லை என்றும், தனது பெயரிலான போலி கணக்குகளை புறக்கணிக்கவும். பின்தொடர வேண்டாம் என்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வலியுறுத்தியுள்ளார்.

அவரது பெயரிலான பேஸ்புக் பக்கத்தை மர்மநபர்கள், ஹேக் செய்து ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்ததாக தகவல் வெளியானது. இதுகுறித்து லோகேஷ் தனது X பக்கத்தில், நான் X மற்றும் இன்ஸ்டாகிராமில் மட்டும் தான் கணக்கு வைத்திருக்கிறேன். வேறு எந்த சமூக ஊடக கணக்குகளும் என்னிடம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.