
விஜயின் தமிழக வெற்றிக்கழக மாநாடு 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பத்திரிக்கையாளர்கள் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் மாநாட்டு பணிகள் நடைபெறுவது குறித்து கேள்வி எழுப்பினர். அவர் காரில் அமர்ந்தபடி பதில் அளித்தார். புஸ்ஸி ஆனந்த் கூறியதாவது, மாநாடு பணிகள் சிறப்பாக நடைபெறுகிறது.
மாநாட்டிற்கு வரும் மக்களுக்காக அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் தொடர்ந்து இதுபோன்று கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தால் நான் எப்படி வேலை பார்க்க முடியும் சொல்லுங்க. நான் தளபதிக்கு அடுத்த இடத்தில் உள்ளேன். இதற்கெல்லாம் பதில் சொல்லும் அளவிற்கு பெரிய ஆள் இல்லை என கூறினார். மேலும் பேசி கொண்டிருக்கும் போது கார் டிரைவர் காரை இயக்கியதால் கோபத்தில் அவரை கடிந்து கொண்டார்.