நான் ஒரு ஆங்கிலேயன், இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்துவதை பார்க்க விரும்புகிறேன் என இங்கிலாந்தின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார்..

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-23 சுழற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லண்டனில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் நேருக்கு நேர் சந்திக்க தயாராக உள்ளன. இந்த போட்டி இன்று புதன்கிழமை இந்திய நேரப்படி மாலை 3 மணி  முதல் 11-ந்தேதி வரை நடைபெறும். இந்த WTC இறுதிக்கு முன், இங்கிலாந்தின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கிரேம் ஸ்வான் சுவாரஸ்யமான கருத்துக்களை தெரிவித்தார்.

WTC இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் கொண்டாட தயாராக இருப்பதாக ஸ்வான் கூறினார். ஜூன் தொடக்கத்தில் ஓவல் மைதானத்தில் போட்டி நடைபெறவுள்ளதால், ஆடுகளம் மிகவும் தட்டையானது மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று ஸ்வான் நம்புகிறார்.

இந்நிலையில், ஓவல் ஆடுகளம் புல் இருப்பதால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நிச்சயம் ஏற்றதாக இருக்கும் என ஜியோ சினிமாவிடம் ஸ்வான் தெரிவித்துள்ளார். பவுன்ஸ் அதிகமாகவும் வாய்ப்பு உள்ளது. ஓவல் வான்கடேவில் உள்ள சிவப்பு களிமண் ஆடுகளங்களைப் போலவே உள்ளது. பவுன்ஸ் அதிகமாக இருப்பதால் சில்லி பாயிண்ட் மற்றும் ஷார்ட் லெக் பீல்டர்களை கொண்டு வருவது நல்லது.

நீங்கள் சுழற்பந்து வீச்சாளர்களை விளையாட விரும்பினால், இலக்கை பாதுகாக்க நீங்கள் பெரிய ஸ்கோர் செய்ய வேண்டும். ஆனால் யார் வெற்றி பெறுவார்கள் என்று கணிக்க முடியாது. ஏனெனில் இரண்டு அணிகளுமே உலகத்தரம் வாய்ந்த அணிகள். ஆனால் ஒரு ஆங்கிலேயராக, இந்த இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா என்று பார்க்க விரும்புகிறேன். தற்போதைய இந்திய அணியிலும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். எனவே ஆஸி., அணிக்கும் கடும் போட்டி இருக்கும் என்றார்.