இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக். இவர் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட நிலையில் அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அந்த வகையில் ஒரு வாரத்திற்கு நீங்கள் யாராக வாழ விரும்புகிறீர்கள் என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் கூறியதாவது, ஒரு வாரத்திற்கு என்று கேட்டால் நான் நிச்சயம் ஏ.ஆர் ரகுமானை தான் சொல்வேன். நான் ஏ.ஆர் ரகுமானாக வாழ ஆசைப்படுகிறேன். ஏனெனில் நானும் அவரின் தீவிர ரசிகர்.

அவர் எப்படிப்பட்ட புதுமைகளை உருவாக்குகிறார் என்பதை அறிய விரும்புகிறேன். நான் ஒருமுறை கூட அவரை நேரில் பார்த்ததே இல்லை. அவர் ஒரு ஜீனியஸ். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக சிறந்த இசையை வழங்கி வருகிறார். இதனால் அவருடைய மூளை எப்படி வேலை செய்கிறது என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். அவர் இரவு நேரங்களில் அதிகமாக பணியாற்றுவார் என்ற கேள்விபட்டுள்ளேன். இதுதான் எனக்கு சவாலாக இருக்கும். இருப்பினும் அவர் நினைவுகளுக்குள் செல்ல வேண்டும் என்பதால் கவலை இல்லை என்று கூறியுள்ளார். மேலும் தினேஷ் கார்த்திக் பேட்டி தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.