
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆரியநரை (ஆளுநரை) விமர்சித்தால் முன்னாள் ஆளுநர் அக்காவுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட எங்களைப் போன்ற பிரதிநிதிகளை பார்க்கும்போது மக்கள் பலமுறை நிராகரித்த அக்காவுக்கு கோபம் வருவது நியாயம் தானே. நீங்கள் எவ்வளவு சத்தமிட்டாலும் தமிழ்நாட்டில் ஒருபோதும் அரசியல் மற்றும் ஆன்மீகம் ஒன்றாக கலக்காது என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு தற்போது தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, என்னை பார்த்து மக்களால் பலமுறை நிராகரிக்கப்பட்டவர் என்று உதயநிதி கூறுகிறார்.
நான் என்னுடைய அப்பா தோளிலோ அல்லது தாத்தா தோளிலோ ஏறி வரவில்லை. நானாக தட்டு தடுமாறி மக்களை தடம் மாறாமல் சந்தித்தி வருகிறேன். என்றைக்காவது ஒருநாள் எங்களுக்கு வெற்றி கிடைக்கும். எல்லோருக்கும் எல்லாம் என்பது உங்களுடைய கொள்கையாக இருந்தால் நீங்கள் எப்படி துணை முதல்வராக மாறினீர்கள். பாஜக விவசாயிகளுக்கு எதிரான கட்சி என்று வடநாட்டில் ஒரு போலி பிம்பம் இருப்பது போன்று தற்போது தமிழ்நாட்டில் தமிழுக்கு எதிரான கட்சி என்ற போலி பிம்பம் இருக்கிறது. மேலும் இனியாவது இந்த மொழி அரசியலை கைவிட்டுவிட்டு ஆக்கபூர்வமான அரசியலை திமுக முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.