
பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இந்த கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் விமர்சையாக நடைபெற்றது. விஜய் சினிமாவில் இருந்து விலகி முழு நேரமாக அரசியலில் ஈடுபட போகும் நிலையில் மக்கள் பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். வருகிற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிட உள்ளதால் அதற்கான பணிகளில் விஜய் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
தமிழக வெற்றி கழகத்துடன் எந்த கட்சி கூட்டணி வைக்கும் என மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது விஜயுடன் கூட்டணி வைப்பீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த பிரேமலதா விஜயகாந்த் இந்த கேள்வியை நீங்கள் விஜயிடம் தான் கேட்க வேண்டும். நாங்கள் 20 வருட கட்சி. எங்களிடம் இந்த கேள்வியை கேட்கக்கூடாது என கூறியுள்ளார்.
மேலும் எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் போல அரசியலில் விஜய் எடுபடுவாரா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரேமலதா நான் என்ன ஜோசியமா சொல்ல முடியும்? விஜய் எடுபடுவாரா மாட்டாரா அப்படிங்கிறது அவரோட அடுத்த கட்ட நடவடிக்கை, செயல்பாடுகளில் தான் தெரியும் என கூறியுள்ளார்.