தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் ஹிந்தியிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த வருடம் ஹிந்தியில் வெளியான அனிமல் திரைப்படம் 800 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்ததால் தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருக்கிறது. இவர் தற்போது புஷ்பா 2, ஹிந்தியில் சிக்கந்தர், தமிழில் குபேரா போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும்  நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் எல்லை மீறிய கவர்ச்சியாக இருந்ததாக கூறி ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

இதற்கு தற்போது ராஷ்மிகா மந்தனா பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ரோம் நகரில் வசிப்பவர்கள் ரோமன்கள் மாதிரி வாழ வேண்டும் என்பது பெரியவர்கள் சொன்ன வாக்கு. அதை நான் கச்சிதமாக கடைப்பிடிப்பேன். அதேபோன்று பாலிவுட் சினிமாவில் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருந்தால்தான் வாய்ப்புகள் கிடைக்கும். ஆனாலும் நடிகையாக எனக்கென சில வரைமுறைகள் இருப்பதால் கவர்ச்சியில் எப்போதும் சில எல்லைகளை மீறமாட்டேன். மேலும் எந்த மொழியில் நடித்தாலும் அந்த மொழி பெண்ணாக மாறி விடுவது எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.