தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது அமரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி என்ற திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் அந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது நடிகர் சிவகார்த்திகேயன் பேசிய விஷயம் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மாறி ‌ மாறி  கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதாவது நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் வினோத் ராஜ் கூலாங்கள் என்ற படத்தை இயக்கியுள்ள நிலையில் அதற்காக சர்வதேச விருது பெற்றுள்ளார். அதாவது அறிமுக இயக்குனர்களுக்காக வழங்கப்படும் அந்த விருதை கிறிஸ்டோபர் நோலனும் பெற்றுள்ளார். இதனைக் கேட்டவுடன் அவருடைய அடுத்த படத்தை நான்தான் தயாரிப்பேன் என்று கூறினேன். அவர் தமிழ் சினிமாவின் பெருமை. அவரை கொண்டாட வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். நான் யாரையும் கண்டுபிடிச்சு இவங்களுக்கு நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் என்னை அப்படி சொல்லியே பழக்கப்படுத்தி விட்டார்கள். நான் அப்படிப்பட்ட ஆள் கிடையாது என்று கூறினார். மேலும் நடிகர் தனுஷை தான் அவர் அப்படி மறைமுகமாக தாக்கி பேசியதாக சமூக வலைதளங்களில் சர்ச்சை வெடித்துள்ளது.