வியட்நாம் நாட்டில் யாகி புயல் தாக்கியுள்ளது. இதனால் பெருமளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த சூறாவளி புயல் கடந்த சனிக்கிழமை அன்று கரையை கடந்த போது 149 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியதாக கூறப்படுகிறது. அதன்பின் ஞாயிற்றுக்கிழமை இந்த சூறாவளி வலுவிழந்தது. இந்த மழை வெள்ள பாதிப்புகளால் 87 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மேலும் 70 பேரை காணவில்லை என்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த புயலானது வியட்நாம் நாட்டை தாக்குவதற்கு முன்பு தெற்கு சீனா மற்றும் பிலிப்பைன்சில் உள்ள மக்களை தாக்கி 24 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.