மேகாலயா ஹனிமூன் கொலை வழக்கில் தினந்தோறும் புதிய திருப்பங்கள் வெளி வருகின்றன. இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ தீவிரமாக வைரலாகி வருகிறது. அதில், இந்துர் பகுதியைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷியின் இறுதி சடங்கில் அவரது மனையின் கள்ளகாதலனான ராஜ் குஷ்வாஹா கலந்து கொண்டுள்ள காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர் ராஜாவின் மனைவியான சோனத்தின் தந்தையை கைத்தாங்கலாக அழைத்து செல்வது  போன்ற காட்சிகள் இந்த வீடியோவில் தெளிவாக உள்ளது.

அதாவது சோனம் இவரைத்தான் காதலிப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன்பே காதலித்து வந்த நிலையில் விருப்பமில்லாமல் திருமணம் செய்து வைத்ததால் ஹனிமூனுக்கு  கணவனை அழைத்து சென்று கள்ள காதலன் உட்பட 4 பேருடன் சேர்ந்து தீர்த்துக்கட்டியது தெரியவந்துள்ளது.

 

மேலும் சோனம், அவரது கள்ளக்காதலன் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் சோனம் குற்றவாளியாக இருந்தால் அவரை தூக்கிலிட வேண்டும் என உயிரிழந்தரின் சகோதரி கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.