தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டம் கரூரில் நடைபெற்ற போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி அமைத்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் என் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து கடந்த 12ஆம் தேதி நடிகர் விஜயிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக 5 1/2 மணி நேரம் விசாரணை நடத்தினார். மேலும் இந்த விவகாரத்தில் சிபிஐ நடிகர் விஜயின் பெயரையும் சேர்த்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
