இந்தியா போன்ற வளரும் நாடுகளில் கல்வியை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் இடைநிற்றல் என்பது கணிசமான அளவுக்கு காணப்படுகிறது. அதன்படி இந்தியாவில் மட்டும் சுமார் 1.2 மில்லியன் மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் இருந்து இடை நின்று உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. கடந்த கல்வியாண்டில் நாடு முழுவதிலும் இருந்து 12,53,019 மாணவர்கள் பள்ளிக்கு வருகை தரவில்லை. இதில் பெண்களை விட ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் எனவும் தரவுகள் கூறுகின்றன.

கடந்த கல்வியாண்டில் 6,97,121 சிறுவர்கள், 5,55,854 பெண்கள், 44 திருநங்கைகள் கல்வியை தவறவிட்டுள்ளனர்.  இதில் ஆரம்ப நிலையில் 9,30,531 குழந்தைகளும், இடைநிலை மட்டத்தில் 3,22,488 குழந்தைகளும் கல்வி கற்பதில் இருந்து இடைநின்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 20,352 பேர் படிப்பை நிறுத்தியதாக தரவுகள் கூறுகின்றது.