நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இதுவரை 12 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் 13வது தவணை எப்போது வரும் என விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பிஎம் கிஷான் திட்டத்தின் 13 ஆவது தவணை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி பிஎம் கிசான் திட்டத்தின் 13ஆவது தவணை 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி பிப்ரவரி 27ஆம் தேதி அதாவது நாளை தொடங்கி வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி விவசாயிகளிடம் உரையாடுவார். பங்கேற்க விரும்புபவர்கள் என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்ய வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.