நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கார்டு மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மக்கள் நாட்டின் எந்த ஒரு பகுதியில் இருந்தும் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். நாட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை ஆவணங்களில் ஒன்றாக ரேஷன் கார்டு இருந்து வருகிறது. இந்த  நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் தகுதி இல்லாத நபர்களுக்கு வழங்கப்பட்ட ரேஷன் கார்டுகளை விசாரணைக்கு பிறகு ரத்து செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநிலத்தில் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 2022 வரை பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு எதிராக மொத்தம் 1,33,03,625 ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. அயோத்தி மாவட்டத்தில் இந்த காலகட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு எதிராக மொத்தம் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 628 ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தற்போது 658 ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் மற்றும் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகுதியில்லாத ரேஷன் கார்டுகளை உடனே விரைந்து நடவடிக்கை எடுத்து ரத்து செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.