
இந்தியாவில் Google Pay, Pay tm போன்ற பிரபலமான UPI டிஜிட்டல் பேமென்ட் செயலிகள் இன்று முற்றிலும் செயலிழந்துள்ளன. Down detector இணைய தளத்தின் தகவலின்படி, இன்று மாலை நேரத்தில் இந்த சேவை துண்டிப்பு அதிகமாகப் பதிவாகியுள்ளது.
பெரும்பாலான புகார்களில் 64% பேர் பணம் அனுப்ப முடியாத பிரச்னையைக் குறிப்பிட்டுள்ளனர், 28% பேர் பேமென்ட் செயலாக்கத்தில் சிக்கல் கூறியுள்ளார்கள், 8% பேர் செயலியில் நேர்ந்த தொழில்நுட்ப கோளாறுகளை புகாரளித்துள்ளனர்.
இதேபோல, எஸ்பிஐ வங்கியின் பயனாளர்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 57% பேர் பணம் பரிமாற்றம் செய்ய முடியவில்லை என தெரிவிக்க, 34% பேர் மொபைல் பேங்கிங் செயலி வேலை செய்யவில்லை என தெரிவித்துள்ளனர்.
மேலும் 9% பேர் தங்கள் கணக்கு இருப்பை பார்க்க முடியவில்லை எனக் கூறியுள்ளனர்.சமூக ஊடகங்களில் பலரும் தங்களது பரிவர்த்தனை தோல்வி, தாமதமான பணம் திரும்புதல், செயலி முடக்கம் போன்ற பிரச்சனைகளை புகாரளித்து வருகிறார்கள்.
தற்போது இந்த சேவைகள் ஏன் துண்டிக்கப்பட்டன என்பது தெளிவாகவில்லை; அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை கவனித்துப் பார்த்து, வேறு பரிவர்த்தனை விருப்பங்களை பயன்படுத்துமாறு பயனாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.