நாடு முழுவதும் 499 நகரங்களில் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது.பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் தேர்வு மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ளது. நாடு முழுவதிலும் இருந்து சுமார் 18.72 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 1.50 லட்சம் பேர் எழுதுகின்றனர். தேர்வர்கள் காலை 11 மணியிலிருந்து தேர்வு மையத்திற்கு வரலாம். பிற்பகல் 1.30 மணிக்கு தேர்வு மையத்தின் நுழைவு வாயில் பூட்டப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

மேலும் மாணவர்கள் நுழைவுச்சீட்டுடன் ஆதார் மற்றும் பான் கார்டு உள்ளிட்ட ஏதேனும் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். மாணவர்கள் முழுக்கை சட்டை அணிய அனுமதி இல்லை. செருப்பு மட்டுமே அணிய வேண்டும். பெல்ட், தோடு மற்றும் மூக்குத்தி உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்திருக்கவும் அனுமதி இல்லை. நுழைவுச்சீட்டில் அச்சிடப்பட்டுள்ள பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்றை கையில் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.