விஜய் சேதுபதி தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என படு பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வெப் சீரிஸ் பல சர்ச்சைகளை சந்தித்து இருந்தாலும் இவருக்கு பாலிவுட்டில் மவுசு ஏறிக்கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் சுந்தர்.சி இயக்க உள்ள அரண்மனை நான்காம் பாகத்தில் இருந்து விலகிய பின்னணியில் நயன்தாரா இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஏனென்றால் விக்னேஷ் சிவன் ஏ.கே 62 படத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது அஜித்திற்காக தயார் செய்த கதையில் விஜய் சேதுபதியை வைத்து எடுக்க விக்னேஷ் சிவன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் எல்லா விஷயத்தையும் பிசினஸ் மூளையுடன் செய்யும் நயன்தாரா நாசுக்காக தூண்டில் போட்டு விஜய் சேதுபதி தன் பக்கம் இழுத்து உள்ளதாக திரையுலகில் பேசப்பட்டு வருகிறது