ஐபிஎல் 2025 தொடரில், விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் வை.எஸ். ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக வெறும் 163 ரன்களில் சுருண்டது. பலத்த பேட்டிங் லைன்அப் இருந்தபோதும், பெரும்பாலான வீரர்கள் தாக்கு பிடிக்க முடியாமல் அவுட்டாகினர்.

அணியின் தரமான ரன்கள் அடித்த ஒரே வீரராக அனிகேத் 74 ரன்கள் அடித்தார். ஹைதராபாத் அணியின் இந்த மோசமான பேட்டிங் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் மீம்ஸ் மற்றும் நகைச்சுவை பதிவுகள் குவிந்து வருகின்றன.

“எனக்கு சிக்ஸர் அடிக்கிறது ரொம்ப பிடிக்கும்” என்ற போலி ஸ்டைலில் மீம்கள் உருவாக்கப்பட்டு இணையத்தை கலக்கி வருகின்றன. ரசிகர்கள் தோல்வியை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டும், குழப்பத்துடன் விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.