
தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் கடந்த மாதம் முதல் மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய போது அவரை ஆதரித்த சீமான் திராவிடம் மற்றும் தேசியம் இரு கண்கள் என அறிவித்ததால் அவர் கோபத்தில் விஜயை விமர்சிக்க ஆரம்பித்து விட்டார். அதன் பிறகு நாம் தமிழர் கட்சி நிர்வாகியை சாட்டை துரைமுருகனும் விஜயை சரமாரியாக விமர்சித்து வருகிறார். அதாவது விஜயின் ரசிகர்கள் பள்ளிக்கூடம் செல்லும் சிறுவர்கள் என்றும் மழைக்கு லீவு விட்டால் வீட்டிலிருந்து வீட்டுப்பாடம் செய்வது போன்று சமூக வலைதளத்தில் கமெண்டுகளை வெளியிட்டு வருகிறார்கள் என்றும் கூறியிருந்தார். அதோடு நடிகர் விஜய்க்கு தொண்டர்கள் கிடையாது எனவும் ரசிகர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள் எனவும் கூறினார்.
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் அவருடைய கட்சியில் யாரும் அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள் கிடையாது என்று பலரும் இந்த கருத்தினை முன்வைக்கின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் ரசிகர்கள் தற்போது இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக முன்னதாக நாங்கள் ரசிகர்களாக இருந்தோம் தற்போது தமிழக வெற்றிக்கழகத்தின் தொண்டர்களாக மாறிவிட்டோம். எங்கள் தலைவர் சொன்ன சித்தாந்தங்களை பின்பற்றவும் செய்கிறோம். எனவே நாம் தமிழர் தம்பிகளுக்கு எங்களைப் பற்றி இனி கவலை வேண்டாம் என்று பதிவிட்டுள்ளனர். மேலும் நடிகர் விஜயின் கட்சி கொள்கைகள் குறித்த பாடலையும் அதனுடன் இணைத்துள்ள நிலையில் அமைச்சர் போது மிகவும் வைரலாகி வருகிறது.
நாங்கள் ரசிகர்களாக இருந்து TVK தொண்டர்களாக மாறி விட்டோம், அவர் சொன்ன தலைவர்கள், சித்தாந்தங்கள் பின்பற்றவும் செய்கிறோம்👍
நாம் தமிழர் தம்பிகளுக்கு கவலை வேண்டாம்😂🔥#TheGreatestOfAllTime #TVKVijay #Leo @actorvijay pic.twitter.com/JsMlqLsO7a
— Mᴜʜɪʟツ𝕏 (@MuhilThalaiva) November 26, 2024