
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் ஒருபோதும் பாஜக மற்றும் திமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என அறிவித்துள்ள நிலையில் பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவுடன் கூட்டணி கிடையாது எனவும் தமிழக வெற்றி கழகத்தின் தலைமையில் தான் 2026 தேர்தலை சந்திக்க இருக்கிறோம் எனவும் நடிகர் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் எனவும் செயற்குழுக் கூட்டத்தின் போது தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அமைச்சர் கே என் நேரு நடிகர் விஜய் திமுக உடன் கூட்டணி வைக்க மாட்டோம் எனக் கூறியது பற்றி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது. இன்னும் அதிமுக கூட்டணி இறுதி செய்யப்படவில்லை. அங்கு கூட்டணி ஆட்சியா இல்லை தனித்து ஆட்சியா என்பதே பெரிய பிரச்சினையாக இருக்கிறது.
முதல்வர் ஸ்டாலின் ஒரு மாதத்திற்கு முன்பாகவே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட நிலையில் தற்போது திமுக களத்தில் இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுப்பதனால் அவர் வெற்றி பெறப்போவதில்லை. வெற்றி எங்களுக்கு தான். அதிமுகவுக்கு ஒருபோதும் வெற்றி கிடைக்காது.
திமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சொன்னது பற்றி நீங்கள் கேட்கிறீர்கள். நாங்கள் முதலில் திமுக கூட்டணிக்கு நடிகர் விஜயை அழைக்கவே இல்லை என்றார். மேலும் திமுக கூட்டணிக்கு விஜய் அழைக்காத போது திமுகவுடன் கூட்டணி இல்லை என அவர் கூறியுள்ளார் என்றார்.