சேலத்தில் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களத்தில் யாரும் இல்லாததால் திமுக வெற்றி அடைந்துள்ளது. அதிமுகவினர் ஓட்டுகளை கள்ளத்தனமாக போட்டு திமுகவினர் போலி வெற்றி அடைந்துள்ளனர்.

நெல்லை சென்று அல்வா சாப்பிட்ட முதல்வர் மு க ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களுக்கு அல்வா கொடுத்துள்ளார் என்று கூறினார். மேலும் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத  சூழல் உருவாகியுள்ளதாகவும் போலீஸ்காரர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளதாகவும் இதுவே திமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் மோசமான ஆட்சிக்கு சான்று என்றும் விமர்சித்தார்.