
நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் சட்டவிரோதமான அலெக்சாண்டர் கிளிகள் வளர்க்கப்படுவதாக தகவல் வெளியானது. இதையடுத்து கடந்த 15ம் தேதி ரோபோ சங்கர் வீட்டில் சோதனை நடத்திய வனத்துறை அதிகாரிகள் அந்த கிளிகளை பறிமுதல் செய்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தனர். உரிய அனுமதி பெறாமல், வீட்டில் வெளிநாட்டு ரக ‘அலெக்சாண்ட்ரின்’ கிளிகளை வளர்த்ததன் காரணமாக வனத்துறை சார்பில் ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிளிகள் வளர்த்ததற்காக நாங்கள் இருக்கும் சூழலுக்கு, 2.5 லட்சம் ரூபாய் அபராதம் என்பது ரொம்ப பெரியத்தொகை என்று ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்கா வருத்தம் தெரிவித்துள்ளார். இந்தத் தொகையை கட்டுவது கஷ்டம்தான் கிளிகளைப் பணம் கொடுத்து வாங்கவில்லை. கிஃப்டாக வந்த கிளிகள் இவை என்று கூறியுள்ளார். அனுமதியில்லாமல் 2 கிளி வளர்த்ததற்காக வனத்துறை நடிகர் ரோபோ ஷங்கருக்கு அபராதம் விதித்தது.