உப்பு சுவையை அதிகரிப்பதற்காக மின்சார ஸ்பூன் என்ற புதிய தொழில்நுட்பத்தை ஜப்பான் தற்போது கண்டறிந்துள்ளது. உணவு சுவையாக இருக்க வேண்டும் ஆனால் உப்பை குறைக்க வேண்டுமா? ஜப்பானின் இந்த புதிய கண்டுபிடிப்பு உங்களுக்கு உதவியாக இருக்கும். மின்சார உப்பு ஸ்பூன் என்பது உணவின் உப்பு சுவையை அதிகரிக்கும் திறன் கொண்ட ஒரு புதுமையான தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றது. இதன் மூலமாக அதிக உப்பு பாதிப்புகள் இல்லாமல் சுவையான உணவை சாப்பிடலாம். இது பேட்டரியால் இயங்கும் மற்றும் பிளாஸ்டிக், மெட்டல் ஆகியவற்றால் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்பூனின் நுனிப்பகுதி வழியாக மெதுவான மின்சாரம் செலுத்தப்படுகின்றது. இது நாக்கில் இருக்கும் சோடியம் அயனி மூலக்கூறுகள் உடன் இணைந்து செயல்படுகின்றது. இது உங்கள் உணவில் இருக்கும் உப்பின் சுவையை அதிகரிக்கும். உப்பு குறைத்து சாப்பிட வேண்டும் என்று நினைத்தாலும் குறைந்த உப்பு உணவுகள் சுவையாக இல்லை என்று பலரும் கருதுவார்கள். இந்த பிரச்சனையை எதிர்கொள்ள மக்களுக்கு மின்சார உப்பு ஸ்பூன் உதவியாக இருக்கும். இந்த ஸ்பூன் ஜப்பானில் தற்போது ஆன்லைனில் மட்டுமே கிடைக்கின்றது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் எனவும் இது $99 விலை என விற்கப்படுகிறது.