தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பாக சென்னை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, கோவை, திருப்பதி, பெங்களூரு ஆகிய நகரங்களில் தினம்தோறும் 1080 டீலக்ஸ், ஏசி வசதி விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதில் பலர் பயணம் செய்து வரும் நிலையில் பயணிகளின் வசதிக்காக பழைய பேருந்துகளை நீக்கி புதிய பேருந்துகளை இணைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

அதன்படி அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 1138 வெளி மாவட்டபேருந்துகள் , 1190 நகரபேருந்துகள் , 672 பேருந்துகள் என புதிதாக மொத்தம்  3000 புதிய பேருந்துகள் வாங்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு படுக்கை மற்றும் இருக்கை வசதியுடன் கூடிய 260 புதிய  சொகுசு பேருந்துகள் வாங்கும் பணியும் தற்போது  நடைபெற்று வருவதாகவும் வருகின்ற மே மாதம் முதல் புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வர இருப்பதாகவும் அதனை தொடர்ந்து  ஜூன் மாதம் இறுதிக்குள் 260 விரைவு சொகுசு பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.