சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் தலைமைச் செயலகத்தில் நேற்று கைத்தறி கைத்தறி திறன், துணி நூல் மற்றும் கதர்  கீழ் செயல்பட்டு வரும் பட்டு வளர்ச்சி துறையின் மூலமாக இரண்டு இளம் புழு வளர்ப்பு மையம் ஒரு பட்டுப்புழு விதை உற்பத்தி மையம் அமைக்க மூன்று பயனாளிகளுக்கு 1.81 கோடி மானியம் வழங்கினார். தமிழ்நாடு பட்டு வளர்ச்சி துறைகளில் செயல்பட்டு வரும் அரசு பட்டு முட்டை உற்பத்தி நிலையத்தின் மூலமாக தரமான மற்றும் நோயற்ற மற்றும் பட்டு முட்டை உற்பத்தி செய்யப்பட்டு பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் பட்டு முட்டை தேவையை கருத்தில் கொண்டும் தரமான பட்டு முட்டை தொகைகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு தடையின்றி வழங்கவும் தனியார் தொழில் முனைவோரை பட்டு முட்டை தகுதிகள் உற்பத்தி செய்ய ஊக்குவிக்கும் வகையிலும் 2023 24 ஆம் வருடத்தின் பட்டு வளர்ச்சி துறைக்கான அறிவிப்பில் தனியார் தொழில் முனைவோர் மூலம் ரூபாய் 2 கோடி 16 லட்சம் மதிப்பீட்டில் ஒரு பட்டுப்புழு விதை உற்பத்தி மையம் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது.