
அசாம் மாநிலத்தில் ஸ்ரீ பூமி அருகே மாவட்ட சிறை உள்ளது. இங்கு இளம் பெண் ஒருவர் போலீஸ்காரர்களால் பலாத்காரம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1:30 மணியளவில் அந்த வழியாக இளம்பெண் ஒருவர் தெருவில் நடந்து சென்றார். இந்த ஜெயிலின் அருகே சிறை காவலர்களுக்கான குடியிருப்பு உள்ளது. இங்கு காவலர்களான ஹரேஸ்வர் கலிதா (45), கஜேந்திர கலிதா (50) ஆகியோர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் அந்த இளம் பெண் தனியாக வருவதை பார்த்த நிலையில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அந்த பெண்ணை வாயை பொத்தி அவர்கள் அறைக்குள் இழுத்துச் சென்றனர்.
அந்தப் பெண் கத்தி கூச்சலிட்டும் அவர்கள் விடவில்லை. அவர்கள் இருவரும் சேர்ந்து அந்த இளம் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த நிலையில் அந்த வழியாக போலீஸ்காரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பெண்ணின் சத்தத்தை கேட்டு உள்ளே சென்று பார்த்தபோது அவர்கள் கையும் களவுமாக பிடிபட்டனர். அந்தப் பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் மற்றும் வீடு இல்லாதவர் என்பது தெரிய வந்த நிலையில் அந்த போலீஸ்காரர்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீஸ்காரர்களே இரவு நேரத்தில் ஒரு பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.