
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பலோட் மாவட்டத்தில் நேற்று இரவு ஒரு பயங்கர விபத்து நடந்துள்ளது. அதாவது ஒரு சொகுசு காரில் 13 பேர் சென்று கொண்டிருந்த நிலையில் எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த 6 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் மீதமுள்ளவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் காயமடைந்த 7 பேரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ள நிலையில் ஆறு பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது தொடர்பாக உள்ளூர் அதிகாரி ஒருவர் கூறியதாவது, விபத்தில் 5 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட மொத்தம் 7 பேர் காயம் அடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்தில் ஜிக்னேஷ் கும்கர் என்ற 7 வயது சிறுவன், இம்லா பாய் (55), சகுன் பாய் கும்ப்கர் (50), மனிஷா கும்கர் (35), சுமித்ரா பாய் கும்கர் (50), துர்பத் பிரஜாபதி (30) ஆகியோர் இறந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.