தெலங்கானா நிஜாமாபாத் மாவட்டம், மோபல் மண்டலத்தின் சிங்கம்பள்ளி கிராமத்தில், சவிதா என்ற பெண் சூனியம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, மரத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவப்பு நிற சேலை அணிந்திருந்த சவிதாவை மரத்தில் கட்டியபடி, ஒரு குழுவினர் தாக்கும் காட்சி சமூக ஊடகங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தகவலின்படி, கங்காராம் என்ற நபரின் ஆடு சவிதாவின் வீட்டுக்குள் நுழைந்து உணவு சாப்பிட்டதுடன், அங்கு சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. இதனால் சவிதா அதனை கண்டித்து, அவர்  கால்நடைகளை சரியாக பராமரிக்கச் சொல்லியுள்ளார். ஆனால் கங்காராம் அதை கண்டுகொள்ளலாமால் இருந்துள்ளார், சவிதா அவரது எருமையை மரத்தில் கட்டியுள்ளார்.

“>

 

இதனால் கோபமடைந்த கங்காராம் மற்றும் அவரது குடும்பத்தினர், சவிதா சூனியம் செய்ததாக குற்றம்சாட்டி, அவளை மரத்தில் கட்டி தாக்கினர். சம்பவத்தின் வீடியோ வெளிவந்ததும், மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.