திருச்சி மாவட்டம் மாலை மடைப்பட்டியை சேர்ந்தவர் சின்னதம்பி (62). இவரது மனைவி செல்லம்மாள் (48). இந்த தம்பதியினர் தங்களது கூட்டு நிலத்தை தமிழ்நாடு காகித ஆலை நிர்வாகத்திற்கு கொடுத்தனர்.

அதற்கான தொகை சமீபத்தில் வந்தது. அந்த பணத்தை சின்ன தம்பியின் உறவினர்கள் பிரித்து கொடுத்தனர். அன்றிலிருந்து சின்னதம்பி தினமும் மது குடித்துவிட்டு கலந்து மனைவியுடன் தகராறு செய்து வந்தார்.

நேற்று முன்தினம் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அதன் பிறகு செல்லம்மாள் தூங்கிவிட்டார். நள்ளிரவு நேரம் சின்னத்தம்பி கோபத்தில் தனது மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் செல்லம்மாளை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி செல்லம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சின்ன தம்பியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.