சென்னை கே.கே. நகரில் நள்ளிரவில் கணவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்த போது, அதிவேகமாக ஸ்பீடு பிரேக்கரை கடந்ததால் கீழே விழுந்து 9 மாத கர்ப்பிணி திவ்யாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் போக்குவரத்து போலீஸார் விரைந்து உதவியதால், சரியான நேரத்தில் திவ்யாவை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று  அவரது உயிரை காப்பாற்றினர்.

இதனையடுத்து அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி பெண்ணிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தலையில் பலத்த காயம் ஏற்பட்ட திவ்யாவுக்கு அறுவை சிகிச்சை செய்து முடித்து தற்பொழுது தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.