தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்த திரிஷா நடித்திருந்த நிலையில் சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் லியோ படத்தில் தன்னை உயிருடன் விட்டதற்கு நடிகை திரிஷா லோகேஷ் கனகராஜுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நேற்று நடந்த லியோ பட வெற்றி விழாவில் பேசிய திரிஷா, லோகேஷ் படங்களில் ஹீரோயினிகள் இறந்து விடுவாங்க, ஆனால் லியோவில் அவர் என்னை கொலை செய்யல. இதற்கு லோகேஷ் கனகராஜுக்கு நன்றி என்று கூறினார். லியோ படத்திற்கு ஆடியோ வெளியீடு நடைபெறாததால் அதன் வெற்றி விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.