நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தொடர்ந்து பெரியார் பற்றி விமர்சனம் செய்து வருகிறார். இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக கட்சியின் முன்னாள் நிர்வாகி புகழேந்தியிடம் இது பற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்காக சீமானுக்கு மனநிலை பாதித்ததால் தான் இப்படி எல்லாம் விமர்சிக்கிறார் என்று கூறினார். அதன் பிறகு சீமானை பற்றி எனக்கு நன்றாக தெரியும். இதற்கு முன்பு சீமான் இப்படியா பேசினார். ஆனால் விஜய் எப்போது கட்சி தொடங்கினாரோ அப்போதிலிருந்து தான்  சீமான் தேவையில்லாமல்  பேச ஆரம்பித்துவிட்டார்.

விஜயின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் தான் சீமான் பெரியாரைப் பற்றி தொடர்ந்து விமர்சிக்கிறார். இதற்கு முன்பு சீமான் இப்படி பேசியது கிடையாது அமைதியாக தான் இருந்தார். ஆனால் விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு தான் அவர் டான்ஸ் ஆட ஆரம்பித்துவிட்டார். அவர் கட்சி ஆரம்பித்தால் இவருக்கு என்ன பிரச்சனை எதற்காக இப்படி கத்திக் கொண்டிருக்கிறார். நான் இதனை கண்டுபிடித்து விட்டேன். கண்டிப்பாக விஜயின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் தான் சீமான் மனநிலை பாதித்தவர் போல் இப்படி பெரியாரைப் பற்றி தொடர்ந்து விமர்சிக்கிறார் என்றார். மேலும் விஜயால் தான் சீமான் இப்படி எல்லாம் பேசுவதாக புகழேந்தி சொன்னது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.