
இந்திய சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகியாக இருப்பவர் பி. சுசிலா. இவர் தமிழ் உட்பட இந்திய மொழிகள் அனைத்திலும் 25,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இந்நிலையில் தமிழ் சினிமா பற்றியும் பாடல்கள் பற்றியும் தற்போது பி. சுசிலா கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து சேலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுசிலா கூறியதாவது, இனி எப்போதும் அந்த காலத்து பாடல்கள் போன்று வராது. கோடம்பாக்கம் தூங்குகிறது.
இன்றைய தமிழ் சினிமாவில் நல்ல இசையும் இல்லை நல்ல பாடல்களும் இல்லை. இதை பார்க்கும்போது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதன் பிறகு எம்.எஸ். விஸ்வநாதன், கே.வி. மகாதேவன் ஆகியோர் இசையமைப்பாளராக இருந்தபோது ஸ்டுடியோக்குள் நுழைந்தாலே ஒரு இசை ஒலிக்கும். ஆனால் தற்போது அப்படி இல்லை. மேலும் ரசிகர்கள் இல்லையென்றால் பாடகர்களும் இல்லை என்று கூறினார்.