விஜயின் தமிழக வெற்றி கழகம் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது. தமிழக வெற்றி கழகம் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறது என தொண்டர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது தமிழக வெற்றிக் கழகத்துடன் பாமக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. நேற்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் கூறியதாவது, பாமக ஒரு சாதியினருக்கான கட்சி அல்ல. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாதியினருக்குமான கட்சி. பாமக உடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகளுக்கு நல்லது கெட்டது எல்லாம் தெரியும். தமிழக வெற்றி கழகத்துடன் நான் எந்த பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை என கூறியுள்ளார்.