தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற 20 ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் நாகார்ஜுனா மற்றும் நடிகை ராஸ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் தற்போது பட குழுவினர் ஈடுபட்டுள்ள நிலையில் மும்பையில் நடைபெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் உட்பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது நடிகர் நாகார்ஜுனா ராஷ்மிகாவை புகழ்ந்து பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இது பற்றி அவர் கூறியதாவது, திறமையின் பவர் ஹவுஸ் நடிகை ராஷ்மிகா. கடந்த 3 படங்களில் வெளியான அவரது படங்களை பாருங்கள்.

நம்மில்  யாரிடமும் 2000 முதல் 3000 கோடி வரை வசூல் சாதனை புரிந்த திரைப்படங்கள் இல்லை. அவர் நம் அனைவரையும் மிஞ்சி விட்டார் என்று கூறினார். மேலும் கடந்த சில வருடங்களில் நடிகை ராஷ்மிகா தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி சினிமாக்களில் நடித்து வரும் நிலையில் அவரது அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி வசூல் பேட்டை புரிந்தது.

குறிப்பாக அனிமல் திரைப்படம் 800 கோடி வரை வசூலித்த நிலையில், சாவா திரைப்படம் 600 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. அதன் பிறகு புஷ்பா மற்றும் புஷ்பா 2 திரைப்படங்கள் ஒன்றாக சேர்ந்து கிட்டத்தட்ட 2000 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.