இரும்பு அல்லாத உலோக பொருளான லித்தியம் செல்போன், லேப்டாப், கேமரா மற்றும் மின்சார வாகனங்களுக்குரிய பேட்டரி ஆகியவைகளை தயாரிப்பதில் முக்கிய மூலப்பொருளாக விளங்குகிறது. இதில் லித்தியம் இந்தியாவில் முதல் முறையாக காஷ்மீரில் கண்டறியப்பட்டு உள்ளது. அங்கு உள்ள சலால் ஹமைனா பகுதியில் 5.9 மில்லியன் டன் லித்தியம் இருப்பது இப்போது ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதிக தொகை கொடுத்து வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘லித்தியம்’ இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இனி பெட்ரோலில் இயங்கும் கார், பைக்கிற்கு பதில் எலெக்ட்ரிக் கார், பைக் பயன்பாடு அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல், விலையும் குறையும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சிரமப்படும் வாகன ஓட்டிகளுக்கு இது மகிழ்ச்சியான செய்தி. மேலும், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சாதனங்களின் விலையும் குறையும்.