ஆதார் கார்டு என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு முக்கியமான ஆவணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசின் முக்கிய பணிகளுக்கும் சரி, வங்கி உள்ளிட்ட முக்கியமான வேலைகளுக்கும் ஆதார் அத்த்தியாவசிமான ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில்  ஒருவர் மரணம் அடைந்தவுடன் தானாக ஆதார் அட்டையும் செயல்பாட்டை இழக்கும் வகையிலான தொழில்நுட்பத்தை அமல்படுத்த உள்ளது UDAI.

மரண சர்டிபிகேட் கொடுக்கும் அதிகாரியே ஆதார் எண்ணையும் மத்திய அரசுக்கு அனுப்பிவிடுவார். அவருடைய உறவினர்களின் ஒப்புதலைப் பெற்று இறந்தவருடைய ஆதார் எண்ணை டி ஆக்டிவேட் செய்து விடுவார்கள். இதுநாள் வரை இறந்தவர்கள் பலரின் ஆதார் நம்பர்கள் செயல்பாட்டிலேயே இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.