இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். காலை எழுந்ததில் இருந்து இரவு தூங்க செல்லும் வரையிலும் தேவைப்படும் ஒன்றாக செல்போன் மாறிவிட்டது. இந்த நிலையில் நாம் பயன்படுத்தும் செல்போன் தொலைந்தாலும் அதில் உள்ள தகவல்கள் திருடப்படாமலும் நமது ஃபோனை வேறு நபர்கள் பயன்படுத்தாமலும் தடுக்க மத்திய அரசு உதவுகிறது.

இந்த வசதி தற்போது டெல்லியில் நடைமுறையில் உள்ளது. CEIR என்று சொல்லக்கூடிய இந்த வசதி தற்போது டெல்லியில் நடைமுறையில் உள்ளது. உங்களது ஃபோனில் IMEI நம்பரை கொண்டு அந்த செல்போனை மொத்தமாக பிளாக் செய்யும் வேலையை இந்த CEIR செய்கிறது. இந்த திட்டம் விரைவில் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.