
மனிதர்கள் பலவிதமான வளர்ப்பு பிராணிகளை செல்லமாக வீட்டில் வைத்து வளர்ப்பது உண்டு. அதில் பெரும்பாலானோர் நாய்களையே வளர்த்து செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர் .அதற்கு காரணம் மற்ற உயிரினங்களை காட்டிலும் நாய்கள் மனிதர்களிடத்தில் மிகவும் நட்பாகவும் பாசத்துடனும் பழகக்கூடியவை. அதற்கு சிறந்த உதாரணமாக எக்ஸ் வலைதளத்தில் தற்போது வீடியோ ஒன்று பரவி வைரலாகி வருகிறது.
அதன்படி பெண் ஒருவர் தனது கண்களை மூடிக்கொண்டு அழுவது போல் ஆக்சன் செய்கிறார். அதை கண்டதும் அவரது வளர்ப்பு செல்லப்பிராணிகளான நாய்க்குட்டிகள் அவர் அருகே சென்று அவருக்கு ஆறுதல் கூறுவது போலவும் ஒரு நாய்க்குட்டி ஒரு படி மேலே சென்று அவரை கட்டி அணைப்பது போல் நின்று கொண்டு சமாதானம் செய்ய முயல்கிறது. இந்த வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டு காண்போரைக் கவர்ந்து நெகிழ்ச்சியான கருத்துக்களை பெற்று வருகிறது.
Reason why dogs are the best pic.twitter.com/dCJD2hOeYB
— B&S (@_B___S) February 12, 2024