தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்த திரிஷா நடித்திருந்த நிலையில் சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று முன்தினம் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. அதில் நடிகர் விஜய் பேசிய பல விஷயங்கள் விவாதங்களாக மாறியுள்ளது. இந்த விழா எப்போது ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது வருகின்ற நவம்பர் 5ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சன் டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.