சென்னை மாவட்டத்தின் கலெக்டர் உமா மகேஸ்வரி. இவரது கணவர் விமல் ஆனந்த் வழக்கறிஞராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் தம்பதியினர் இருவரும் சேர்ந்து நடை பயிற்சி மேற்கொண்ட போது கோம்பை இன வளர்ப்பு நாய் ஒன்று உமா மகேஸ்வரியை கடித்தது. இதில் உமா மகேஸ்வரிக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

நாயின் உரிமையாளர்கள்  சுரேஷ்- ஸ்ரீஜா தம்பதியினர். இவர்களின் வளர்ப்பு நாய் பிறருக்கு இடையூறு ஏற்படுத்தியதாலும், ஆபத்து விளைவிக்கும் வகையில் அஜாக்கிரதையாக செயல்பட்டதாலும் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.