
சண்டிகர் மாநிலத்தின் போலீஸ்காரராக பணிபுரியும் அஜய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஜோதி என்ற மனைவி இருக்கிறார். இவர் சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவருடைய ரீல்ஸ் மோகத்தால் தற்போது அவருடைய கணவரின் வேலையை பறிபோய்விட்டது.
அதாவது போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஒரு சாலையில் சென்று ஜோதி நடனமாடி ரீல்ஸ் எடுத்து அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அவர் நடனம் ஆடும் போது வாகனங்கள் ஒன்றுக்கு பின் ஒன்றாக நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருப்பினும் அதனை ஜோதி பொருட்படுத்தவில்லை.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலான நிலையில் அவருடைய கணவர் அஜயை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். மேலும் இன்றைய காலகட்டத்தில் ரீல்ஸ் மோகம் என்பது இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் அதனால் ஏற்படும் பின் விளைவுகள் மற்றும் விபரீதங்களை சிலர் உணராமல் இருக்கிறார்கள். இதற்கு உதாரணமாய் பல சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது மனைவியின் லைக் வாங்கும் ஆசையால் கணவன் வேலையை இழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.