அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டத்தில் வாலிபர் ஒருவர் சாலையில் படுத்துக்கொண்டு ரகளை செய்தார். அந்த வாலிபர் மதுபோதையில் இருந்தார். குடும்ப தகராறு காரணமாக வாலிபர் மது குடித்துவிட்டு ரகளை செய்தது தெரியவந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். வாலிபரால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.