மகாராஷ்டிரா மாநிலத்தில் இளம் பெண் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருக்கிறார். அப்போது ஒரு தம்பதி காரில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் காரில் சென்று கொண்டிருந்த கணவன் மனைவி திடீரென இறங்கி வந்த அந்த இளம் பெண்ணுடன் தகராறு செய்துள்ளனர். அப்போது அந்த இளம்பெண்ணை அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி கொடூரமான முறையில் தாக்கியதில் அந்த பெண்ணுக்கு முகத்தில் ரத்தம் வந்தது. அவர்கள் மூவரும் மாறி மாறி சண்டை போட்டுக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் கணவன் மனைவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்குள் வாகனத்தை பார்க்கிங் செய்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட கோபத்தில் தான் கணவன் மனைவி இருவரும் இளம்பெண்ணை தாக்கியுள்ளனர். மேலும் அந்தப் பெண் காயத்தோடு தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நிலையில் இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.