உத்தரபிரதேசின் பரேலி மாவட்டத்தில் தொடர் கொலைகளை செய்த கொடூர நபர் கைது செய்யப்பட்டார். இவர் நடுத்தர வயது பெண்களை மிரட்டி கொலை செய்து வந்துள்ளார். கைது செய்யப்பட்ட குல்தீப் குமார் கங்குவர் தனது மாமியார் மீது கொண்ட வெறுப்பே தன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளார். தனது மனைவி தனது வீட்டை விட்டு சென்றதால் மன உளைச்சலுக்கு ஆளாகி மது, கஞ்சா போன்றவற்றை உபயோகித்து வந்துள்ளார்.

தனது இலக்கை தனியாக இருக்கும்போது தாக்குவார். தனது கொடூர செயலுக்கு சாட்சியாக யாரும் இருக்கக்கூடாது என்பதற்காக கரும்பு தோட்டங்களில் கொலை செய்துள்ளார். கொலை செய்த பின்னர் அந்த பெண்ணின் உடலை சேலையால் கட்டி விட்டுச் செல்வார். பரேலி எஸ்பி அனிருத் ஆரியா தலைமையில் 22 குழுக்கள் அமைக்கப்பட்டு இவரை தேடி வந்துள்ளனர். 1500 சிசிடி கேமராக்கள், 1.5 லட்சம் மொபைல் போன்கள் ஆகியவற்றை கண்காணித்ததன் மூலம் இவரை கைது செய்துள்ளனர்.