தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் இன்று அதிகாலை ஒரு கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

பைபாஸ் சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து அந்த வழியாகச் சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பைக்குகளில் சென்றவர்கள் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.

காரின் வேகம் எந்த அளவுக்கு இருந்தது என்றால், மோதிய வேகத்தில் பைக்குகள் அப்பளம் போல நொறுங்கின. விபத்து குறித்துத் தகவல் அறிந்த  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

“>

 

இந்த விபத்தால் அந்த பைபாஸ் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பெரும் பதற்றமும் நிலவியது. அதிவேகமே இந்த விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.