
பாலிவுட் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் போனி கபூர். இவர் தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர். இவர்களுடைய மகள்கள் தான் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர்.
இந்நிலையில் போனி கபூரின் தாயார் நிர்மல் கபூர் (90) உடல்நலக்குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவருடைய மறைவுக்கு தற்போது திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் தயாரிப்பாளர் போனி கபூரின் சகோதரர் நடிகர் அனில்குமார் மற்றும் போனி கபூரின் முதல் மனைவியின் மகன் நடிகர் அர்ஜுன் கபூர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.