நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் தந்தை ருஷிகுமார் உடல்நலக் குறைவால் காலமானார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ரச்சிதா, தமிழில் சரவணன் மீனாட்சி-3 தொடரின் மூலம் பிரபலமானவர். மேலும், பிக் பாஸ் சீசன்-6ல் போட்டியாளராக கலந்துகொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த நிலையில், தனது இன்ஸ்டா ஸ்டேட்டஸில், தந்தை மறைந்துவிட்டதாக வருத்தத்துடன் அவர் பதிவிட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது